search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தையல் எந்திரம்"

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் பெற ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை மூலம் விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறன் ஏழை பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்க தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்குள் தாசில்தாரிடம் பெறப்பட்ட வருமானச் சான்று, இருப்பிடச் சான்று தாசில்தாரிடம் பெற வேண்டும்.

    அல்லது ரே‌ஷன்கார்டு, பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 6 மாத கால தையல் பயிற்சி சான்று, வயது சான்று (20 முதல் 40 வரை) அல்லது கல்வி சான்று அல்லது பிறப்பு சான்று, சாதிச்சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், மகளிர், மாற்றுத்திறன் பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் பாஸ்போர்ட் சைஸ் விண்ணப்பதாரரின் கலர் போட்டோ ஆகிய சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 386 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களும், 6 பயனாளிகளுக்கு ஓய்வூதியதாரர் உத்தரவு ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×